உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்


உள்ளாட்சி  அமைப்புகளுக்கான வாக்காளர்  பட்டியலில்  பெயர் சேர்ப்பது  எப்படி? தேர்தல் ஆணையம்  விளக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2019 9:41 PM GMT (Updated: 29 Oct 2019 9:41 PM GMT)

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் குறித்த விவரங்கள் www.tnsec.tn.nic.in என்ற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்களது பெயரை தொடர்புடைய சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்கு வாக்காளர்கள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அதிகாரியிடமோ, தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் திருத்தல் அல்லது மாறுதல் கோரி விண்ணப்பிப்பதற்கும் நவம்பர் 18-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story