சுஜித் மரணம்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - நடிகர் விவேக்


சுஜித் மரணம்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - நடிகர் விவேக்
x
தினத்தந்தி 30 Oct 2019 6:28 AM GMT (Updated: 30 Oct 2019 6:28 AM GMT)

சுஜித் மரணத்திற்கு பிறகாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று நடிகர் விவேக் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், நிலோபர் கபில், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சரத்குமார், விவேக் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

சுஜித் மரணத்திற்கு பிறகாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

Next Story