முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலனை நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மு.க.ஸ்டாலின் பேட்டி


முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலனை நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:27 PM GMT (Updated: 30 Oct 2019 11:27 PM GMT)

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலிக்கப்படும் என்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பசும்பொன் வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சத்தியமூர்த்தி, சுப.தங்கவேலன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட ஏராளமானோரும் மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலனை

தேசியத்தை உடலாகவும், தெய்வீகத்தை உயிராகவும் கொண்டு வாழ்ந்து காட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். சுதந்திர போராட்ட வீரராக இருந்து பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர் தேவர்.

பசும்பொன் என்றால் சுத்தமான தங்கம். அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் பசும்பொன் தேவர். அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவதை தி.மு.க. பெருமையாக கருதுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story