பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது; நடவடிக்கை பாயும்- முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை


பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது; நடவடிக்கை பாயும்- முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2019 6:04 AM GMT (Updated: 31 Oct 2019 6:04 AM GMT)

பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது; போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்

சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை மருத்துவர்கள் முன் வைக்கின்றனர்; போராடுபவர்கள் அங்கீகரிக்கப்படாத சங்கத்தை சேர்ந்தவர்கள், அவர்களுடன் பேச்சு இல்லை.  அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் பேசி தீர்வு கண்டுள்ளோம்.

பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது; போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும். 

ஒரு மருத்துவரை உருவாக்க மக்கள் பணத்தில் இருந்து  ரூ.1.24 கோடி செலவிடப்படுகிறது.  பணிக்கு வராத மருத்துவர்களுக்கு பதிலாக வேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்.

விவசாயிகளுக்கு சாதகமான சட்டம்தான் வேளாண் ஒப்பந்த சட்டம். அதிக விளைச்சலின் போது விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என கூறினார்.

Next Story