மாநில செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + ISRO scientists have reached a new milestone - Edapadi Palaniswamy Greetings

இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நேற்று மாலை 3.25 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

இந்த ராக்கெட் மூலம் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கை கோளான ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கை கோள் மற்றும் வணிக ரீதியிலான வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என்று இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த திட்டத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியாவிற்கு மேலும் பெருமை கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வெற்றியின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால், பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. இஸ்ரோவில் டெக்னீசியன் பணிகள்
இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. சங்கத் தமிழ் போற்றும் தங்கத்தலைவி
இன்று(பிப்ரவரி 24-ந்தேதி) தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள். தமிழர்களின் நல்வாழ்வுக்கும், தமிழ் மண்ணின் உயர்வுக்கும் விடியல் தந்த ஓர் வீரத்தலைவியின் விலாசம் இந்த மண்ணிற்கு கிடைத்த நாள்!
4. நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவோம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு
மாவட்ட ரீதியான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய மாற்றங்களையும், சீர்த்திருத்தங்களையும் ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை