கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்


கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Jan 2020 9:44 AM GMT (Updated: 18 Jan 2020 9:44 AM GMT)

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மு.க.ஸ்டாலினை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். கே.எஸ்.அழகிரியுடன்  கே.வீ.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் பேட்டி அளித்த  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. திமுக-காங்கிரசுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசினோம். 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதற்கு பின்பும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என கூறினார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூட்டணி குறித்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை திமுக, காங்கிரஸ் இரு கட்சியினருமே தவிர்க்க வேண்டும். ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, விரும்பத்தகாத விவாதங்கள் கூடாது என கூறி உள்ளார்.

Next Story