குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 18-ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் - தவ்ஹீத் ஜமாத்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 18-ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் - தவ்ஹீத் ஜமாத்
x
தினத்தந்தி 29 Feb 2020 10:06 AM GMT (Updated: 29 Feb 2020 10:06 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மார்ச் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.

சென்னை

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி  ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கையில் பதாகைகளுடன், தேசிய கொடியை ஏந்தி  இன்று போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மாலை வரை இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவைகளை திரும்ப பெரும் வரையிலும் தமிழகத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்படாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போரட்டத்தின் அடுத்த நகர்வாக வரும் மார்ச் 18 ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமாக சி.என்.கே சாலையில் உள்ள கடைகள் அடைக்கபட்டிருந்தது.

Next Story