தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதற்கட்ட நிலையிலேயே உள்ளது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதற்கட்ட நிலையிலேயே உள்ளது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 27 March 2020 1:40 PM GMT (Updated: 27 March 2020 1:40 PM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதற்கட்ட நிலையிலேயே உள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வளாகத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய சென்றார்.  அவருடன், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார்.

இதன்பின்பு முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதற்கட்ட நிலையிலேயே உள்ளது என கூறியுள்ளார்.

தமிழகத்தில் 76 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இது ஒரு கொடிய நோய்.  இந்த கொடிய நோயை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்வதே.  போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.  14 இடங்களில் பரிசோதனை நடைபெறுகிறது.

பொதுமக்களை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்.  பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம் என முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார்.  இதன்பின் சேனிட்டைசர் கொண்டு கைகளை கழுவியபடி அந்த இடத்தில் இருந்து சென்றார்.

Next Story