கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை; சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை; சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 27 March 2020 10:30 PM GMT (Updated: 27 March 2020 8:30 PM GMT)

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் அதன் செயல்பாடுகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்தியாவில் ஒழிக்க முடியாமல் இருந்த பெரியம்மை, போலியோ உள்ளிட்டவைகளை தமிழர்கள் சவாலாக எதிர்த்து ஒழித்து கட்டினோம். மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்று 3-வது நிலைக்கு போகாமல் தடுக்க முடியும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 24 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் வீட்டில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story