விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு: பா.ம.க.வின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு


விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு: பா.ம.க.வின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 28 March 2020 9:45 PM GMT (Updated: 28 March 2020 8:54 PM GMT)

விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்களித்துள்ளது இது பா.ம.க.வின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நடவு, அறுவடை போன்ற களப்பணிகள், விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தல், வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் எந்திரங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான விவசாய பணிகளுக்கும் ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்களித்துள்ளது. 

இது பா.ம.க.வின் கோரிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். பூ, பழம் போன்ற எளிதில் அழுகும் பொருட்கள் அறுவடை செய்யப்பட்டும் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் அழுகுவதால் அவற்றுக்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story