தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன?


தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன?
x
தினத்தந்தி 29 March 2020 2:46 AM GMT (Updated: 29 March 2020 2:46 AM GMT)

தமிழகத்தில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மராட்டியத்தி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை படி நடந்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகாலை: இஞ்சி, தோல் நீக்கப்படாத எலுமிச்சை பழத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வழங்கப்படுகிறது.
காலை: சப்பாத்தி, இட்லி, சம்பா கோதுமை உப்புமா, 2 முட்டை மற்றும் பால்
காலை 10 மணி: இஞ்சி, எலுமிச்சை சுடு தண்ணீர்
காலை 11 மணி:சாத்துக்குடி பழச்சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாலட்.
மதிய உணவு:சப்பாத்தி, புதினா சாதம், சாம்பார் சாதம், சாதத்துடன் இரண்டு வகையான பொறியல்புலடங்காய், பீன்ஸ், கேரட், கீரை வகைகள், முட்டை, மிளகு ரசம், பொட்டுக்கடலை இவற்றினைக் கொடுத்து வருகின்றனர். 
மதிய வேளையில் முக்கியமாக பொட்டுக்கடலை, மிளகுரசம் முக்கியமாக கொடுக்கப்படுகின்றதாம்.
மாலை 3 மணி: மஞ்சள், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீருடன் சிறிது உப்பு கலந்து கொடுக்கின்றார்களாம்.
மாலை: பருப்பு ரசம், வேகவைத்து மூக்கடலையும் கொடுத்து வருகின்றனர்.
இரவு: ரவா உப்புமா, பீன்ஸ் கேரட் சேர்க்கப்பட்ட ரவா கிச்சடி, சப்பாத்தி அல்லது சேமியா, வெங்காய சட்னி, காய்கறி குருமா, பால்
இரவு 9 மணி: இஞ்சி, எலுமிச்சை சுடு நீர்
இரவு 11 மணி: மஞ்சள், மிளகு, சிறிது உப்பு போட்ட நீரும் வழங்கப்படுகின்றது.

Next Story