தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது


தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2020 8:15 AM GMT (Updated: 29 March 2020 8:15 AM GMT)

தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 144 தடையை மீறியதாக 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.  மேலும், தடையை மீறியதாக  14 ஆயிரத்து 815 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் 11 ஆயிரத்து 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story