கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 29 March 2020 4:32 PM GMT (Updated: 29 March 2020 4:32 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன.

இதுபற்றி தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது, கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளை தயார்படுத்தி வருகிறோம்.  தமிழகத்தில் அரசு சார்பில் 15 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன.

சமூக பரவலை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story