கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சத்துணவு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு


கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சத்துணவு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு
x
தினத்தந்தி 29 March 2020 9:19 PM GMT (Updated: 29 March 2020 9:19 PM GMT)

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சத்துணவு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் இரா.நூர்ஜஹான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அனைத்து மக்களும் தனித்து இருந்து தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும். அனைத்து மக்களும் தனித்து இருந்து பாதுகாப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில், தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், ஏழைகள், வீடுகள் இல்லாதோர்களையும் அரசு பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நோய் தடுப்புக்காக தன்னலம் பாராது மருத்துவத்துறை, காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் மற்றும் இதர அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சத்துணவு ஊழியர் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது. இந்த கொடிய வைரசை ஒழித்திட தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கும் சமூக சமயலறை மூலம் சத்துணவு ஊழியர்கள், உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள்.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு செய்ய முன்வரும் பணிகளுக்கும் சத்துணவு ஊழியர்கள் இணைந்து பணிபுரிந்திட நோய் தடுப்பு நிவாரண நிதிக்காக சத்துணவு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story