தமிழகத்தில் கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


தமிழகத்தில் கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 30 April 2020 1:25 PM GMT (Updated: 30 April 2020 1:40 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  தமிழகத்தில் இன்று மட்டும் 161பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 


Next Story