சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை


சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை
x
தினத்தந்தி 2 July 2020 3:28 PM IST (Updated: 2 July 2020 3:28 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து தொடங்கியது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணையை நடத்தி வருகிறார். இவ்வழக்கு விசாரணையை தமிழகஅரசு, மதுரை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ இவ்வழக்கை கையில் எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணை மாற்றப்பட்டது. 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். அவர் திருச்செந்தூரில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் ஆஜரானதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

Next Story