தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே
x
தினத்தந்தி 31 July 2020 3:42 PM GMT (Updated: 31 July 2020 3:42 PM GMT)

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்றும், சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையேயான ராஜ்தானி சிறப்பு ரயில் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Next Story