போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு


போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2020 10:11 AM GMT (Updated: 4 Aug 2020 10:11 AM GMT)

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை  நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு நிர்ணயித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Next Story