சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள் - மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டார்


சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள் - மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 15 Aug 2020 7:45 PM GMT (Updated: 15 Aug 2020 7:23 PM GMT)

சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக சிறு கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் இதர மதவழிபாட்டு கூடங்கள் கடந்த 10-ந்தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

* வழிபாட்டுத் தலங்களில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

* வழிபாட்டுத் தலங்களின் நுழைவு வாயிலில் பக்தர்களின் வசதிக்காக கைகளை சுத்தம் செய்ய சோப்புநீர் கலவைகளை கட்டாயம் வைக்க வேண்டும்.

* வழிபாட்டின்போது போதிய சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன் ஒருபோதும் அதிக கூட்டம் சேராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

* வழிபாட்டுத் தலங்களுக்குள் உணவு பிரசாதங்கள் வழங்க அனுமதி இல்லை.

* வழிபாட்டுத் தலங்களின் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து மற்றும் இதர பாதுகாப்பு முறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story