நாகை: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்


நாகை: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2020 2:01 PM GMT (Updated: 1 Sep 2020 2:01 PM GMT)

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நாட்களில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. .

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. 

இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறக்கப்பட உள்ள பேராலயத்தில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், செப். 8ம் தேதி வரை வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்களுக்கு தடை என்றும் நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story