துப்பாக்கியால் வக்கீலை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளிக்க வேண்டும் - மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


துப்பாக்கியால் வக்கீலை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளிக்க வேண்டும் - மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 9 Sep 2020 6:52 PM GMT (Updated: 9 Sep 2020 6:52 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் வக்கீலை மிரட்டிய சம்பவம் தொடர்பாக, போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இசக்கிராஜா. இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தன்னிடம் ஒப்படைக்காததால் நெல்லையை சேர்ந்த வக்கீல் இசக்கிபாண்டியனை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இதுதொடர்பாக தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

Next Story