திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்
திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். புதிய திட்டங்களை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர் அலுவலகம் எதிரில் சுமார் ரூ.2½ கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் பிற்பகல் 2.45 மணியளவில் காரிலேயே கிரிவலம் சென்றார். கிரிவலப்பாதை முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
14 கிலோமீட்டர் தூரமும் காரிலேயே கிரிவலம் சென்ற அவர், கிரிவலம் முடிந்ததும், விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story