நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
சென்னை,
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 15.97 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 14.37 லட்சம் பேர் தேர்வை எழுதினர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தேர்வு மையங்களில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது.
மேலும் கொரோனாவால் நீட் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்காக கடந்த 14 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளும் இன்று(அக்டோபர் 16) வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள தேர்வு முடிவுகளை, தேர்வர்கள் தங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு அறிந்துகொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீட் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Related Tags :
Next Story