மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் + "||" + 7.5% internal allocation for government school students: MK Stalin's letter to Purohit by Governor Banwarilal purohith

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பான மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார். 

மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருக்கிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!” என்று அதில் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்
மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.
2. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற முதலமைச்சர் தீவிரம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார்.