மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed in 1,391 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,84,554 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,16,867 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 48 வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,762 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,854 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,988 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 70,378 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 1,23,34, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

2. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது
தமிழகத்தில் நேற்று 2,494 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
3. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் - தொல்லியல் துறையினர் கள ஆய்வு
கங்கை கொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டனர்.
4. இந்தியாவில் இன்று 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் புதிதாக 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. புதுச்சேரியில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 16 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.