தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

x
தினத்தந்தி 18 Feb 2021 3:07 AM GMT (Updated: 18 Feb 2021 3:07 AM GMT)

தமிழகத்தில் நேற்று 644 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19 ஆயிரத்து 97 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 18 ஆயிரத்து 717 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 380 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 14 ஆயிரத்து 446 பேர் முதல் முறையாகவும், 4 ஆயிரத்து 651 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 524 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 5 ஆயிரத்து 619 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.

Next Story