மாநில செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் - சரத்குமார் + "||" + The decision on the Chief Minister will be taken after the legislature wins the election - Sarathkumar

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் - சரத்குமார்

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் - சரத்குமார்
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் தீரவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று வருகை தந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், “மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலை சந்தித்து பேசினேன். கூட்டணி குறித்து கமலிடம் பேசினேன். நல்லவர்கள் எல்லோரும் இணையலாம் என்று கமல்ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்று முடிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். 

மரியாதை, விகிதாசாரம் உள்ளது என்றுதான் அதிமுக உடன் இணைந்து பயணித்தோம். ஆனால் இப்போது அது இல்லை. சமகவை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம். ஆனால் அவர்கள் இதுகுறித்து பேசாததால் கூட்டணியில் இருந்து விலகினேன். காலில் விழுந்து கேட்கிறேன், தமிழக மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சைப் பேச்சு: ஆ.ராசா விளக்கம் திருப்தி இல்லை ,48 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சட்டப்பேரவை தேர்தலில் 48 மணிநேரம் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
2. சட்டப்பேரவை தேர்தல்: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
3. மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நவோமி ஒசாகா, பியான்கா
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, கனடாவின் பியான்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
4. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
சட்டப்பேரவை தேர்தலில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
5. இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.