மாநில செய்திகள்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மரணம் எடப்பாடி பழனிசாமி இரங்கல் + "||" + Edappadi Palanisamy mourns death of mother-in-law of Deputy First Minister O. Panneerselvam

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மரணம் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மரணம் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (வயது 92) உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
உத்தமபாளையம், 

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (வயது 92) உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் நேற்று மாலையில் உத்தமபாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வள்ளியம்மாள் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
2. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பதில்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
3. ‘‘அவதூறு பரப்பி ஆட்சிக்கு வர நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது’’ தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘‘அராஜக தி.மு.க. ஆட்சிக்கு வராது. அவதூறு பரப்பி ஆட்சிக்கு வர நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது’’, என்று தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
5. சைதாப்பேட்டையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சைதை துரைசாமி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
‘‘சைதாப்பேட்டையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சைதை துரைசாமி’’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.