மாநில செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ் + "||" + Petition seeking dismissal of Sasikala's ongoing case against ADMK General Committee

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். அதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நீக்கி, அவர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தது செல்லாது என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த பொதுக்குழுவையும், அதில் இயற்றப்பட்ட 12 தீர்மானங்களையும் செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.ம.மு.க. என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருவதால் அவ்வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ரவி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவி, மனுவுக்கு பதில் அளிக்க சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்புக்கிடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது எப்படி...?
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2. தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
3. பெரம்பலூர் தொகுதியை அ.தி.மு.க. இழக்க காரணம் என்ன?
தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதியை அ.தி.மு.க. இழக்க நேரிட்ட காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4. கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்குவோம்: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
5. அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை