கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி? பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆலோசனை


கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி? பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆலோசனை
x
தினத்தந்தி 20 April 2021 8:29 PM GMT (Updated: 20 April 2021 8:29 PM GMT)

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி? பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆலோசனை.

சென்னை, 

பொதுமக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்கலைக்கழகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. இதில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் உள்பட பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களையும், செயல்திட்டங்களையும் முன்வைத்தனர்.

அப்போது துணைவேந்தர்கள் மத்தியில் வேண்டுகோள் விடுத்து பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

மாணவர்களின் பரந்த திறனை பயன்படுத்தி, சமூகத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை திறம்பட ஏற்படுத்தி, பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவுவதோடு, கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனாவை தடுப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கொரோனா முடிவுக்கு வரும் வரையிலும் இதனை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story