கொரோனா தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

கொரோனா தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம்
x
தினத்தந்தி 29 April 2021 3:41 AM GMT (Updated: 29 April 2021 3:41 AM GMT)

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி, 

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சி தலைவர் தாமோதரன் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நூதன முறையில் பொதுமக்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அதாவது கொரோனா தடுப்பூசியின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஆரம்பசுகாதார நிலையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதற்கான அத்தாட்சியை காண்பித்து ஊராட்சி தலைவரிடம் ஒரு கிலோ தக்காளியை பெற்று செல்கிறார்கள். மக்களை ஊக்கப்படுத்தவே இந்த நூதன விழிப்புணர்வை கையில் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Next Story