கொரோனா நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு


கொரோனா நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை  சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 1 May 2021 1:04 AM GMT (Updated: 1 May 2021 1:04 AM GMT)

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை தேர்வு செய்து அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த தனியார் ஆஸ்பத்திரிகள் தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்ச 50 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்க வேண்டும். குறிப்பாக ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றிலும் தலா 50 சதவீதம் ஒதுக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வேறு நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 


Next Story