மாநில செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்” + "||" + ADMK Thank you to the people who voted for the Coalition: Volunteers must make a commitment ”

அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்”

அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்”
அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வாக்காளர்களுக்கு நன்றி

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தங்களது பொன்னான வாக்குகளை அளித்துள்ள வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் அரும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

எதிர்க்கட்சி பணி

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டசபையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடனும், கட்சியின் கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடமையைத் தொடருவோம்

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அ.தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், அ.தி.மு.க.வை கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு, தோள் நின்று உழைப்பதற்கும், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அ.தி.மு.க.வை காப்போம். கடமைகளைத் தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்; மும்பை மேயர் கைகூப்பி வேண்டுகோள்
பொதுமக்கள் தயவு செய்து இரட்டை முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என மும்பை மேயர் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. 'கொரோனாவில் இருந்து நம்மையும், நாட்டையும் காப்போம்' மு.க.ஸ்டாலின் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு வேண்டுகோள்
கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டு கொரோனாவில் இருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என்று மு.க.ஸ்டாலின் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. கொரோனா பரவலை குறைக்க உரிய பாதுகாப்பு முறைகளை கையாள்வோம் பொதுமக்களுக்கும், தி.மு.க.வினருக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம் என்றும், கொரோனா பரவலை குறைக்க உரிய பாதுகாப்பு முறைகளை கையாள்வோம் என்றும் பொதுமக்களுக்கும், தி.மு.க.வினருக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. தபால் ஓட்டு எண்ணிக்கையில் புதிய நடைமுறை கூடாது தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேண்டுகோள்
தபால் ஓட்டு எண்ணிக்கையில் புதிய நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
5. அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு உடல்நலம் விசாரித்தார்.