மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு + "||" + Electric train service increase in Chennai from today

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக 57 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைய தொடங்கியதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மின்சார ரெயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வார நாட்களில் 151 மின்சார ரெயில் சேவை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று (31-ந்தேதி) முதல் மின்சார ரெயில் சேவை அதிகரித்து சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 151-லிருந்து 208 மின்சார ரெயில் சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 86 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 32 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 208 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் குறித்த அறிவிப்பு வெளியீடு
நாளை தொடங்கும் மெட்ரோ ரெயில் சேவைக்கான நேரம் குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2. சென்னையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
3. கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
4. சென்னையில் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்
சென்னையில் நீர்நிலை, வடிகால் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5. சென்னையில் இதுவரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் இதுவரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை