கடும் தட்டுப்பாடு தமிழகத்தில் 28,763 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கடும் தட்டுப்பாடு தமிழகத்தில் 28,763 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 7 Jun 2021 7:50 PM GMT (Updated: 7 Jun 2021 7:50 PM GMT)

கடும் தட்டுப்பாடு தமிழகத்தில் 28,763 பேருக்கு கொரோனா தடுப்பூசி.

சென்னை,

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசிடம் 1.1 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் தடுப்பூசி தட்டுப்பாடு என கூறப்படுகிறது. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமுடன் இருந்தாலும், போதிய அளவு தடுப்பூசி தமிழக அரசிடம் கையிருப்பு இல்லை.

அந்த வகையில் நேற்று 1,069 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 ஆயிரத்து 763 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 10 ஆயிரத்து 584 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்து 94 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 442 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 875 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 12,768 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 35 ஆயிரத்து 420 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Next Story