மதுக்கடைகள் திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றும் ஆதரிக்காது - கே.எஸ்.அழகிரி


மதுக்கடைகள் திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றும் ஆதரிக்காது - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 19 Jun 2021 6:23 PM IST (Updated: 19 Jun 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகள் திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றும் ஆதரிக்காது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுக்கடைகளை திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றும் ஆதரிக்காது என்று தெரிவித்தார். 

மேலும் கர்நாடக அரசுக்கு மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று தெரிவித்த அவர், இது அரசியல் அல்ல என்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
1 More update

Next Story