முதியோர் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடி மோசடி முன்னாள் வங்கி ஊழியர் கைது

முதியோர் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடி மோசடி முன்னாள் வங்கி ஊழியர் கைது.
சென்னை,
சென்னையை அடுத்த திருப்போரூரைச் சேர்ந்தவர் ஹரிக்குமார். இவர் முன்னாள் வங்கி ஊழியர். வங்கியில் வேலை பார்த்த அனுபவத்தில், தான் வேலை பார்த்த வங்கியில் கணக்கு வைத்துள்ள முதியோர்களை அணுகி, உங்கள் கணக்கில் உள்ள பணத்தை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்தால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஹரிக்குமார் ஆசைகாட்டி உள்ளார். அதை நம்பி முதியோர்கள் சிலர் தங்களது வங்கி கணக்கில் இருந்த பணத்தை ஹரிக்குமார் சொன்ன இன்னொரு வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர். ஹரிக்குமார் முதியோர்கள் கொடுத்த பணத்தை குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டதாக போலியான ரசீது கொடுத்துள்ளார்.
அடுத்தகட்டமாக முதியோர்கள் கொடுத்த பணத்தை குறிப்பிட்ட தனியார் வங்கியில் இருந்து எடுத்து மோசடி செய்துள்ளார். இவ்வாறு முதியோர்களை ஏமாற்றி ரூ.4 கோடி வரை சுருட்டி உள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஹரிக்குமார் கைது செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story