மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு + "||" + 69% reservation in medical studies: Federal Government ordered to respond

மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய அரசின் நிலைபாட்டை தெரிவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு திமுக மற்றும் அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த இடஒதுக்கீடு அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இந்த ஆண்டிற்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது சாத்தியமில்லாதது என்று தெரிவித்தனர். அடுத்த கல்வியாண்டில் அதாவது இந்த கல்வியாண்டில் எவ்வளவு சதவீதம் அமல்படுத்த முடியும் என்று அறிவித்து விட்டு இந்த ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்குதொடரப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. "தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.