தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை - தமிழக அரசு தகவல்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை - தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 20 July 2021 8:41 AM GMT (Updated: 20 July 2021 8:41 AM GMT)

தமிழகத்தில் 4 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 4 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி தமிழகத்தில் மொத்தம் 2,298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. அந்த எண்ணிக்கை குறைந்து, தற்போது தமிழகத்தில் மொத்தம் 1,491 கட்டுப்பத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகை, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்கள் முழுமையாக  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக கோவையில் 210 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், சென்னையில் 156 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக தர்மபுரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், திண்டுக்கல், காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story