மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்வு + "||" + Mettur dam water level rises to 34141 cubic feet

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்வு
கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75.34 அடியாக இருந்த நிலையில் இன்று 77.43 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 34,141 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 34.44 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணைக்குக் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று 7,051 கன அடியாக உயர்ந்துள்ளது.
3. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 76.18 அடியாக உயர்ந்துள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75.29 அடியாக உயர்ந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.83 அடியாக உயர்ந்துள்ளது.