மாநில செய்திகள்

சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் + "||" + Torrent Gas has set up 25 CNG units in Chennai-Tiruvallur districts. The stations were opened by MK Stalin

சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள ‘சிட்டி கேட் நிலையம்' மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.


‘டொரண்ட்' கியாஸ் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு வினியோக திட்டத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தின் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் ‘சிட்டி கேட் நிலையம்' 1.4 ஏக்கரில் ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு வினியோகம்

திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 25 சி.என்.ஜி. நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் மேற்கொள்ள தயார்நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள ‘சி்ட்டி கேட்' நிலையத்தில் இருந்து இந்த 25 சி.என்.ஜி. நிலையங்களுக்கு எரிவாயு கொண்டுவரப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள சி.என்.ஜி. வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்ணி, ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜினல் மேத்தா, செயல் இயக்குனர் பிரகாஷ் சஜ்னானி, துணைத்தலைவர் ஆர்.சித்தார்தன், தலைவர் (இயக்கம்) பிரசாத், பொதுமேலாளர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
2. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
3. தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வடகிழக்குப் பருவமழை வெள்ள சேத சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனே நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4. போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறையில் பணிபுரியும் 3,186 பேருக்கு ‘முதல்-அமைச்சர்’ பதக்கம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பொங்கல் திருநாளையொட்டி போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் பணிபுரியும் 3,186 பேருக்கு ‘முதல்-அமைச்சர்’ பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
5. மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் மோடியிடம், மு.க.ஸ்டாலின் உறுதி
கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்துமுயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.