இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 5 ஆயிரம் கிராமங்களில் மக்கள் நாடாளுமன்றம் முத்தரசன் பேட்டி


இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 5 ஆயிரம் கிராமங்களில் மக்கள் நாடாளுமன்றம் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2021 4:12 AM GMT (Updated: 15 Aug 2021 4:12 AM GMT)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 5 ஆயிரம் கிராமங்களில் மக்கள் நாடாளுமன்றம் முத்தரசன் பேட்டி.

திருச்சி,

திருச்சியில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் குறித்தோ, மின்சார சட்ட திருத்த மசோதா குறித்தோ பேச அனுமதிக்கவில்லை. 2 நாட்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இதனால் வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 5 நாட்கள் 5 ஆயிரம் கிராமங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. அதில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதுடன், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்புவோம்.

தமிழக பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து இருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. கொரோனா 3-வது அலை வரஉள்ள சூழலில் கிராம சபை கூட்டத்தை நடத்த வற்புறுத்துவது நல்லதல்ல.

இவ்வாறு ரா.முத்தரசன் கூறினார்.

Next Story