மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் + "||" + Chance of rain in Tamil Nadu for the first 5 days today: Meteorological Center Information

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,  

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய (திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை (06-09-2021) வட உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.09.2021 முதல் 09.09.2021 வரை; வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு வால்பாறை (கோவை), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக மதுரை விமான நிலையம், ஓசூர் (கிருஷ்ணகிரி), திருவள்ளூரில் தலா ஒரு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று மற்றும் நாளை மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல், வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5.09.2021 முதல் 09.09.2021 வரை தென் மற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டிற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!
தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது - அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் - தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
4. உத்தரகாண்டில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்டில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
5. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.