மாநில செய்திகள்

“சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு + "||" + MK Stalin praises Minister Sekar Babu

“சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

“சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஒருகால திட்டத்தில் கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.12,000 வழங்கும் நிகழ்வு சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;-

“சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. 

மேலும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான். இந்த திட்டத்தால் 13,000 குடும்பங்கள் பலனடையும். அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது. 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும். அனைத்து துறைகளையும் முந்திக்கொண்டு சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு திகழ்கிறார்.”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி பணியை கால் முறிந்தபோதும் தொடர்ந்த பெண் பணியாளர்; பிரதமர் மோடி பாராட்டு
இமாசல பிரதேசத்தில் கால் முறிந்தபோதும் கொரோனா தடுப்பூசி பணியை தொடர்ந்த பெண் பணியாளரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
2. ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
3. விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு
விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு.
4. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மு.க.ஸ்டாலின்!
ஆட்சி பொறுப்பை ஏற்று 100 நாட்கள் ஆன நிலையில், பல வரலாற்று சிறப்பு மிகுந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருந்தாலும், தந்தை பெரியார், தன் இறுதி காலத்தில் நடத்திய போராட்டத்துக்கு ஒரு விடிவை கண்டிருக்கிறார்.
5. தர்மபுரி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தர்மபுரி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.