மாநில செய்திகள்

கொளத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் + "||" + MK Stalin inaugurated the Integrated Child Development Center at Kolathur

கொளத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கொளத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை, செயின்ட் மேரிஸ் பள்ளிக்கு அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் பல்லவன் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி, மரக்கன்று நட்டு வைத்தார்.


விளையாட்டு திடல்

மேலும் அவர், சீனிவாசா நகர் 3-வது குறுக்குத்தெருவில் ரூ.28 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார்.

பெரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘அனிதா அச்சீவர்ஸ்’ அகாடமியில் டேலி பயின்ற 157 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், தள்ளுவண்டிகள், மீன்பாடி வண்டிகள் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, தாயகம் கவி எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) எம்.அருணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
3. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
4. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
5. ‘அனைத்து விவசாயிகளும் பயிரை காப்பீடு செய்யுங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அனைத்து விவசாயிகளும் தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.