திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் - நிதி அமைச்சரும் வழிபட்டார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் வழிபட்டார்.
திருச்செந்தூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் சென்றார்.
அவருக்கு, சண்முகவிலாச மண்டபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கு துர்கா ஸ்டாலின் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றும் சாமி தரிசனம் செய்தார்.
இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் நேற்று சாமியை வழிபட்டார்.
அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உள்ளிட்டோர் சென்றனர்.
Related Tags :
Next Story