தமிழகத்தில் 1,600க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் 1,600க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 2:02 PM GMT (Updated: 1 Oct 2021 2:02 PM GMT)

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,612இல் இருந்து 1,597 ஆக குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்றைய  கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 1,53,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,597 ஆக உள்ளது.  சென்னையில் ஏற்கனவே 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 190 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

கொரோனாவில் இருந்து மேலும் 1,623 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,12,684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,099 ஆக உள்ளது. 

கொரோனாவால் மேலும் 25 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 35,603 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். 

கோவையில் 176 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 170 ஆக குறைந்தது. ஈரோட்டில் 109 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 102 ஆக குறைந்தது. செங்கல்பட்டில் 112 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 111 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story