5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: முதல்-அமைச்சர் அறிவிப்பு


5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 3:34 PM GMT (Updated: 1 Oct 2021 3:34 PM GMT)

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

"ப.தெட்சணாமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர், வடக்கு மண்டலம், மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை, .மா.குமார், காவல் ஆய்வாளர், மத்திய புலனாய்வு பிரிவு, வேலூர் மண்டலம்,பா.சக்தி, காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம், .ச.சிதம்பரம், காவல் உதவி ஆய்வாளர், முசிறி காவல் நிலையம், திருச்சி மாவட்டம், அசோக் பிரபாகரன், தலைமை காவலர் 352, சுங்குவார்சத்திரம் காவல் நிலையம், அயல் பணி மத்திய புலனாய்வு பிரிவு, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, தமிழக முதல்-அமைச்சரால்  2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

இவ்விருதுடன்,பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story