திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் வீரபாண்டி ராஜா மரணம்


திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் வீரபாண்டி ராஜா மரணம்
x
தினத்தந்தி 2 Oct 2021 3:38 AM GMT (Updated: 2 Oct 2021 3:38 AM GMT)

வீரபாண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் வீரபாண்டி ராஜா காலமானார்

சேலம்,

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜா உயிரிழந்தார்.  வீரபாண்டி ராஜா இன்று தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். 

வீரபாண்டி ராஜா தற்போது திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக உள்ளார்.  வீரபாண்டி ராஜா மரணம் திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story