ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வில்லியனூர் குழந்தை


ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வில்லியனூர் குழந்தை
x
தினத்தந்தி 3 Oct 2021 7:18 PM GMT (Updated: 3 Oct 2021 7:18 PM GMT)

2 வயதில் அதீத ஞாபக சக்தியால் வில்லியனூரை சேர்ந்த 2 வயது குழந்தை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

வில்லியனூர்
2 வயதில் அதீத ஞாபக சக்தியால் வில்லியனூரை சேர்ந்த 2 வயது குழந்தை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

2 வயது குழந்தை

வில்லியனூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. அவரது மனைவி பவித்ரா. இவர்களது 2 வயது பெண் குழந்தை தேயன் ஸ்ரீ. சிறு வயதிலேயே நினைவாற்றலால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளாள். தனது புத்தி கூர்மையால் தொலைக்காட்சியில் பார்க்கும் படங்களை சரியாக உச்சரிப்பது, அதனை அப்படியே செய்து காண்பிப்பது என பெற்றோரையே அதிசயித்தார்.

சாதனை புத்தகத்தில்...

குழந்தையின் திறமையை வெளிக்கொண்டு வர கடந்த ஜூன் மாதம் இந்திய புக் ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் நடத்திய சோதனையில் குழந்தை வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பெற்றாள்.
அதனை தொடர்ந்து தற்போது ஆசிய அளவிலான ஏசியன் ரெக்கார்ட் சாதனை பதிவு நிறுவனத்தை தொடர்பு கொண்டு குழந்தையின் திறமை குறித்து தெரிவித்தனர். அவர்கள் 9 பிரிவுகளில் குழந்தையிடம் கேள்வி கேட்டனர். இதில் அனைத்து கேள்விகளுக்கும் தேயன் ஸ்ரீ சரியான பதில் அளித்து அசத்தினாள். இதையடுத்து தேயன்ஸ்ரீயை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்து அதற்கான அங்கீகாரமாக சான்றிதழ் மற்றும் நினைவு பெட்டகத்தை அந்த நிறுவனம் வழங்கியது.
குழந்தையின் இந்த அதீத ஆற்றலுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.


Next Story